bike accident near In Perambalur : Father Kills Daughter crippling
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் கிழுமத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55) விவசாயி இவர் இன்று மாலை தனது மகள் பரணியை (12) அரியலூர் தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். அவரை அழைத்து கொண்டு பள்ளியில் விட்டு விட்டு, பின்னர் மருத்துவமனைக்கு சென்று தன்னை பரிசோதனை செய்வதற்காகவும் மோட்டார் சைக்கிளில் இருவரும் அரியலூர் சென்றனர்.
அப்போது கொளப்பாடி பிரிவு பாதை அருகே செல்லும் போது ராஜேந்திரன் மோட்டார் சைக்களில் திடீரென நிலைத் தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தில் பலமாக மோதியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னால் அமர்ந்து வந்த பரணி தூக்கி வீசப்பட்டதில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்ற்கு விரைந்து சென்று ராஜேந்திரன் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதே போல் பரணியையும் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பு செல்வன் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.