Call for withdrawal of local body Election deposit money

தமிழகமெங்கும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் என நான்கு கட்ட தேர்தலுக்கு வேட்பு மனு வாங்கப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் முன்பணம் கட்டி தேர்தலில் போட்டியிட்டனர்.

ஆனால் எதிர்பாராத விதமாக இந்த தேர்தலுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. தொடர்ந்து மூன்று மாதத்தில் தேர்தல் நடைபெறும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் தேர்தல் தள்ளி போய் கொண்டே இருக்கிறது. வருகிற டிசம்பர் மாதம் வரை தேர்தல் நடைபெறுமா என்பது கேள்விகுறியாகவே காணப்படுகிறது.

இதற்கிடையில் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் முன்வைப்புதொகை வேட்பாளர்களிடம் திருப்பிகொடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எனவே, முன்வைப்புதொகையை திருப்பி வாங்கி செல்லவேண்டும் என்றும் அதற்கு கடந்த ஏப்ரல் 15 ந்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. ஆனால் முன்வைப்பு தொகையை திருப்பி வாங்க யாரும் ஆர்வம் காட்டவில்லை. மீண்டும் தேர்தல் வரும் போது பார்த்து கொள்ளலாம் என நினைத்து விட்டனர். எனவே பெரும்பாலன வேட்பாளர்கள் முன்பணத்தினை வாபஸ் பெறவில்லை.

கடந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தலுக்கு முன்வைப்பு தொகை கட்டியவர்கள் உரிய ரசீதை கொண்டு வந்து அலுவலக வேலை நேரத்தில் அந்த பணத்தினை வாபஸ் பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலுக்கு பணம் கட்டியவர்கள் தற்போது கட்டிய பணத்தினை திரும்பி பெற்றுக் கொள்ளவேண்டும்.

தொடர்ந்து தேர்தல் வந்தால் புதிதாகத்தான் பணம் செலுத்த வேண்டும். எனவே இந்த தேர்தல் கணக்கை வேட்பாளர்கள் நேர் செய்து கொள்ளவேண்டும் என தேர்தல் ஆணையமும், அறிவுறுத்தியுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!