Chief Minister’s Girl Child Protection Scheme Savings Bond Recipients Call for Maturity Amount: Perambalur Collector
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சேமிப்பு பத்திரம் பெற்று 18 வயது நிறைவடைந்தவர்கள் இத்திட்டத்தின் கீழ் முதிர்வு தொகை பெறுவதற்கு மாவட்ட சமூக நல அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள் பெற்று தமிழ்நாடு மின்விசை மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே, பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சேமிப்பு பத்திரம் பெற்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பத்தாம் பகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் , ஆதார் கார்டு நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம் – 2 உள்ளிட்ட ஆவணங்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலுள்ள சமூக நல விரிவாக்க அலுவலர்கள் மற்றும் மகளிர் ஊர் நல அலுவலர்களை தொடர்பு கொள்ளவேண்டும் என்றும், மேலும், விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.