Children’s day celebration at the Almighty Vidyalaya School, Siruvachur near Perambalur
பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. பள்ளி முதல்வர் டாக்டர் சிவகாமி முன்னிலை வகித்தார். துணை முதல்வர் சாரதா செந்தில்குமார் வரவேற்றார். பள்ளியின் தாளாளர் ஆ.ராம்குமார் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது: மாணவர்களிடையே ஒழுக்க கட்டுப்பாடு அவசியம் குறித்து விளக்கவுரையாற்றினார். மேலும், மாணவ மாணவிகள் செல்பி எடுத்துக்கொள்வதால் உள்ள இடையூறுகளை விளக்கும் நாடகம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. குழந்தைகள் தினவிழாவையொட்டி வகுப்பிற்கு ஒரு குழந்தைகள் குலுக்கல் முறையில் தோ;வுசெய்து பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளியின் செயலாளர் சிவகுமார், துணைத் தலைவர் சி.மோகனசுந்தரம் ஆசிரியைகள் சந்திரோதயம், ஹேமா ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.