Cops protest in Perambalur demanding repeal of anti-agrarian laws: Farmers arrested!

அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955ல் மத்திய பி.ஜே.பி அரசு பல திருத்தங்களை செய்து அதை அவசர சட்டமாக கடந்த (ஜுன்) 5ந் தேதி மத்திய அரசிதழில் வெளியிட்டு, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீது மத்திய அரசு மறைமுகமாக தாக்குதலை தொடுத்துள்ளது என்றும், அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்த அவசர சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டு மென்று வலியுறுத்தி, விவசாயிகள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக “ஜுன் 10ந் தேதி சட்ட நகலெரிப்பு போராட்டம்” மாநிலம் முழுவதும் நடைபெறும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்திருந்தார்.

அதன்படி, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பாலக்கரை பகுதியில் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன் அனைத்து விவசாயிகள் சங்கங்கங்களை சேர்ந்த மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் 50க்கும் மேற்ப்பட்டோர் அவசர சட்டங்களை மத்திய அரசு திரும்பபெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி நகலெரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைகண்ட பாதுகாப்பு பணியிலிருந்த பெரம்பலூர் போலீசார் எரிந்த கொண்டிருந்த நகல்களை அணைத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!