Corona; Relief items worth Rs 2 lakhs on behalf of Almighty Vidyalaya Public School near in Perambalur


உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் மார்ச் 24ஆம்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு தொண்டு நிறுவனங்களும் தன்னார்வர்களும் ஏழைஎளியவர்களுக்கு இயன்றளவு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி சார்பில் சிறுவாச்சூர் அருகே உள்ள மலையப்ப நகர் பகுதியிலுள்ள நெறிகுறவர் சமுதாய மக்களுக்கு குடும்பத்தினருக்கு மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரணப்பைகளும், சிறுவாச்சூர் துய்மைப் பணியாளர்கள் மற்றும் கூடைபின்னும் தொழிலாளர்களுக்கு அரிசி எண்ணெயுடன் கூடிய மளிகைப் பொருட்களும் புதுக்குறிச்சி கிராமத்தில் ரேசன் கார்டு இல்லாத ஆதரவற்றோருக்கு நிவாரண உதவிகளும் வழங்கினர். நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் ஆ.ராம்குமார் தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர்கள் திலகா (காரை), சுரேஷ் (சிறுவாச்சூர்), சிறுவாச்சூர் ஊராட்சித் தலைவர் ராஜேந்நிரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் செயலாளர் இரா.சிவக்குமார், துணை முதல்வர் சி.மோகனசுந்தரம், மற்றும் பள்ளி நிர்வாகி கோபிநாத் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படவிளக்கம்: கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவால், வீட்டில் முடங்கி கிடப்பதால் வாழ்வாதாரம் இழந்த மலையப்ப நகர் நெறிக்குறவர் சமுதாய மக்களுக்கு பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி சார்பில் நிவரண உதவிகளை சேர்மன் ஆ.ராம்குமார் வழங்கிய போது எடுத்தப்படம். அருகில், பள்ளியின் செயலாளர் இரா.சிவக்குமார், துணை முதல்வர் சி.மோகனசுந்தரம், மற்றும் பள்ளி நிர்வாகி கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!