Coronavirus infection: mask forced; Perambalur collector ordered to pay fine

பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள அறிவிப்பு;

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது மீறுவோர் மீது தொற்றுநோய் தடுப்பு சட்டம் மற்றும் பொது சுகாதாரத்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், அதோடு டூவீலரில் ஒருவருக்கு மேல் பயணத்தாலும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் பொதுமக்களிடையே கைகழுவுதல், பொது இடங்களுக்கு வெளியே செல்லாமல் இருத்தல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நோய் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அடிக்கடி கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு, தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களில் தேவையில்லாமல் நடமாடுவதை தடைசெய்யும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளதன் காரணமாக, பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் பொது இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் முககவசம் அணிதல், வெளியில் சென்று வந்த பிறகு சோப்பு கொண்டு கைகளை சுத்தமாக கழுவுதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர;வுகள் பொதுமக்களிடையே மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளிவரும் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோர் மீது தொற்றுநொய் தடுப்பு சட்டம் மற்றும் பொது சுகாதார சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை மற்றும் அபராதம் வசூலிக்கப்படும். மேலும் இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும். மீறுவோர் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதோடு, அபராதம் வசூலிக்கப்படும். இதைப்போன்றே பொது இடங்களில் தேவையின்றி கூடுவோர் சட்டப் பூர்வ நடவடிக்கைகளுக்கு ஆட்படுவதோடு அபராதம் செலுத்த நேரிடும். எனவே பொதுமக்கள் அனைவரும் நோய் தொற்று தீவிரத்தை உணர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தவறாது கடைப்பிடிக்க கேட்டுகொள்ளப்படுகிறது, என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!