Demonstration in Perambalur condemning Bus fare hike on behalf of TMC

பெரம்பலூர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளைவு அருகே மாவட்டத் தலைவர் வி.கிருஷ்ணஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்றது.

மாநில இளைஞரணித் தலைவர் எஸ். செந்தில்குமார் வரவற்றார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் காரை. சுப்பிரமணியன், வட்டாரத் தலைவர்கள் பி.அசோகன் (வேப்பந்தட்டை), இளவரசன் (வேப்பூர்), சித்தார்த்தன் (ஆலத்தூர்), மோகன் (வேப்பூர்), உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச் செயலாளர் எஸ்.புரட்சிமணி, லேனா.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில், உயர்த்தப்பட்ட பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல், கேஸ் உயர்வைக் கண்டித்தும், உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்தக்கோரியும், விவசாயிகளுக்கு நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தியும், சிறப்பு பொருளாதார மண்டலங்களை தொடங்கிட வலியுறுத்தியும், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களுக்கும் சுங்கச் சாவடிகளில் கட்டணமில்லாமல் அனுமதிக்க கோரியும்,

பள்ளிகளில் 8ம் வகுப்பு வரையிலான கட்டாயத் தேர்ச்சி முறையை தொடர வலியுறுத்தியும், ஆலத்தூர் தாலுகாவில் பேருந்து நிலையம், தீயணைப்பு நிலையம் அமைக்கவும், விவசாயிகளின் வங்கிகடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், பயிர் நட்டத் தொகை உடனே வழங்க வலியுறுத்தியும், நகர் மற்றும், கிராமப் புறங்களில் நிறுத்தங்களையும், கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில். ஏராளமான தா.ம.க. வினர் கலந்து கொண்டனர். பின்னர், கோரிக்கைகள் அடங்கிய மனுவை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!