Dengue: avin a fine of Rs 10 lakh to the bus depot and gave notice by perambalur collector
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 6,7,8,10 வார்டுகளில் சுகாதாரமாக பராமரிக்காத பல்வேறு நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தார் பெரம்பலூர் ஆட்சியர் வே.சாந்தா
பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பராவமல் தடுக்க நகராட்சி நிர்வாகத்தின் மூலம் புகைமருந்து அடித்தல், தண்ணீர் தேங்கவிடாமல் சரிசெய்தல், டெங்கு கொசுப்புழுக்களை கண்டறிந்து அழித்தல் மற்றும் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், பொதுமக்கள் டெங்கு காய்ச்சல் பராவமல் தடுக்க தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்கவேண்டும் என்று தேவையான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், மாவட்ட ஆட்சியர் தினந்தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று டெங்கு தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுசெய்து வருகின்றார்.
அதனடிப்படையில் இன்று பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 6,7,8,10 ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். வார்டு எண் 7-ல் கம்பன் நகர், முத்துநகர் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு வசிப்பவர்களின் வீடுகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரில் கொசுப்புழு உள்ளதா என கண்டறிந்து உருவாகும் வகையில் தண்ணீர் தேங்க விடக்கூடாது என்றும், சுற்றுப்புற சூழலை சுகாதாரமாக வைத்துக்கொள்ளவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிலவேம்பு கசாயம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து வார்டு எண் 8-ல் பங்களா ஸ்டாப் பகுதி, பள்ளிவாசல் தெரு, நியூ காலனி மற்றும் அங்கு உள்ள ஆவின் பால் மைய வளாகத்தினை திடீராய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அங்கு தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக அகற்றவும், டெங்கு கொசுப்புழு உருவாக காரணமாக உள்ள காரணிகளை கண்டறிந்து அதனை அகற்றுவதற்கு உத்தரவிட்டும், கொசுப்புழு உருவாக காரணமாகும் வகையில் சுற்றுபுறத்தை வைத்திருந்ததற்காக அபராதத் தொகையாக ரூ.10,000-ம் விதித்து உத்தரவிட்டார்.
மேலும், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பார்வையிட்டு அங்கு உபயோகப்படுத்த முடியாத நிலையில் உள்ள கழிவரை பீங்கான்களை உடனே அகற்ற ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து வார்டு எண் 10-ல் அமைந்துள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையை ஆய்வு செய்ததில் பேருந்தின் பழைய உதிரி பாகங்கள், டயர்கள் கிடந்ததை கண்டுபிடிக்கப்பட்டு அவைகளை உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டு மழைநீர் தேங்காத வண்ணம் பார்த்துக்கொள்ள உரிய நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மேலும், தமிழ்நாடு மதுபானக்கிடங்கினை ஆய்வு செய்ததில் காலி பிளாஸ்டிக் கப்புகள், பாட்டில்களில் மழைநீர் தேங்கி கொசுப்புழு உருவாகி வளாகம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதை கண்டறியப்பட்டு உரிய நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வின்போது, வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், சுகாதாரத் துறை துணை இயக்குநர் சம்பத், நகராட்சி ஆணையர் முரளி, வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், துப்புரவு ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.