DMK candidate Prabhakaran collects votes in Perambalur Union
பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலப்புலியூர், நாவலூர், கு.புதூர், திருப்பெயர், ஆலம்பாடி, சொக்கநாதபுரம், செஞ்சேரி, கோனேரிபபாளையம், எசனை, கீழக்கரை, கோவிந்தபுரம், சோமண்டாபுதூர், பாரதிநகர், வடக்குமாதவி, ஏரிக்கரை, சமத்துவபுரம், காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் எம்.பிரபாகரன் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். ஆங்காங்கே, கிராம மக்கள் வாக்கு வேட்டைக்கு வரும் பிரபாகனுக்கு ஆரத்தி எடுத்தும், வெற்றி திலகமிட்டும் வாழ்த்தி அனுப்பி வருகின்றனர்.
வேட்பாளர் ம.பிரபாகரனை ஆதரித்து, திமுக மாவட்ட செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன், கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் வீ.ஞானசேகரன், கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.செல்லதுரை, ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் ஆ.கலியபெருமாள், பொறியாளர் ப.பரமேஷ்குமார், ஒன்றிய செயலாளர் எஸ்.அண்ணாதுரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் து. ஹரிபாஸ்கர் உள்ளிட்டோர், கிராமங்களில் வீதி, வீதியாகச் சென்று திமுக தேர்தல் வாக்குறுதியை எடுத்துரைத்து பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.