DMK roadblock condemns police for not taking action against those who burnt A. Raja’s Effigy
டிச. 3ம் தேதி தமிழ்நாடு எடப்பாடி கே. பழனிச்சாமியின் ஊழல் ஆட்சியைக் கண்டித்து திமுக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆ. இராசா எம். பி. சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியைக் கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆ.இராசா வின் உருவ பொம்மையை நேற்றுமுன்தினம் பெரம்பலூர் மாவட்டம் இரூரில், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிமுக நிர்வாகிகள் வேல்முருகன், ஸ்டாலின், ரகு,சிவா, அறிவழகன், ஆணையப்பன்,ஸ்ரீராம் செந்தில், முத்துசெல்வன் ஆகியோர் தி.மு.க துணைப்பொதுசெயலாளர் .ராசா உருவபொம்மையை தீவைத்து கொளுத்தினர்.
இது குறித்து தி.மு.க ஆலத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சோமு.மதியழகன் பாடாலூர் காவல் நிலையத்தில், புகார் அளித்தும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன் தலைமையில் 500-க்கும் மேற்ப்பட்ட தி.மு.க தொண்டர்கள் ஒன்று திரண்டு, இரூரில் செல்லும் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தி கோசமிட்டனர். போராட்டத்தால் 20 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது . சம்பவ இடத்திற்கு வந்த பாடாலூர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து, பாடாலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.
இந்த மறியலில் மாநில நிர்வாகிகள் பா.துரைசாமி, டாக்டர் செ. வல்லபன், வி.எஸ்.பெரியசாமி, மாவட்ட துணைச் செயலாளர்கள் நூருல்ஹிதா இஸ்மாயில், தழுதாழை பாஸ்கர், மாவட்ட பொருளாளர் செ.இரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, தி.மதியழகன், ஒன்றிய பொறுப்பாளர்கள் வீ ஜெகதீசன், சோமு. மதியழகன், சி.ராஜேந்திரன், நகரச்செயலாளர் எம். பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமானோர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.