Doctors bike rally against mixopathy medicine in Perambalur !
பெரம்பலூரில் இன்று காலை, ஐ.எம்.ஏ-வை சேர்ந்த டாக்டர்கள் கலப்பட மருத்துவத்திற்கு எதிராக பைக் பேரணியை பெரம்பலூர் பாலக்கரையில் தொடங்கி திருமாந்துறை சுங்கச் சாவடி வரை நடத்தினர்.
அதில், ஆயுர்வேத சித்த யுனானி பிரிவுகளை கொண்ட மத்திய இந்திய மருத்துவ குழுமம் 19.11.2020 இன்று ஒரு வர்த்தமானி மூலமாக ஆயுர்வேத மேற்படிப்பிற்கான ஒழுங்குமுறையை வெளியிட்டது. அதில் 53 வகையான நவீன அறுவை சிகிச்சைகள் சால்ய தந்திரம் என்று பட்டியலிட்டு இந்நத சிசிச்சை முறைகளை ஆயுர்வேத மருத்துவர்களை செய்ய அனுமத்தித்துள்ளது. இந்த அறுவை சிசிச்சை முறைகள் நவீன மருத்துவ முறைகள் நவீன மருத்துவத்தை சார்ந்தது என்றும், எவ்வித முன்பயிற்சியும் இல்லாமல் சிகிச்சைக்குப் பிறகு கொடுக்க வேண்டிய நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் பற்றிய போதிய விவரம் இல்லாமல் ஆயுர்வேத மருத்துவர்கள் சிகிச்சை செய்வது சாத்தியமல்ல என்றும், அப்படி செய்தால், நோயாளிகளுக்கு சிகிச்சையில் குளருபடி நேரும் என்றும், அனைத்து மருத்துவ முறைகளையும் கலப்பதால் நோயாளிகள் தங்களுக்கு பிடித்த மருத்துவமுறையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை இழப்பதோடு, கூட்டு மருத்துவ முறை திணக்கப்படுவதாகவும், அதோடு, அரசு நிதி ஆயாக்க அறிமுகப்படுத்தி, தேசிய கல்விக் கொள்ளை 2020 வழியாக ஒரே நாடு, ஒரே அமைப்பாக கொண்டு வர முயற்சிக்கிறது. இதனால் அனைத்து மருத்துவ முறைகளையும் கலந்து அனைத்து நோய்களுக்கும் ஒரு பொதுவான அணுகுமுறை வரும். இது சிறப்பு சிகிச்சைககளுக்கு வழி செய்யாது என்றும், மருத்துவ வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்றும், நவீன மருத்துவத்தால் மக்களின் நலனில் பெரிய முன்னேற்றங்கள் அடைந்துள்ளளோம். பெரியம்மை, இளம்பிள்ளை வாதம், நோய்கள் ஒழிக்கப்பட்டதோடுஇ காசநோய்கள், பெண்கள் பிரவிக்கும் போது இறப்பு சதவீதம், 5வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு சதவீதமும் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதால், அவரவர் மருத்துவத்தை அவரவர் செய்வது அனைவருக்கும் நல்லது என்றும், பிற மருத்துவத்தை நவீன மருத்துவர்கள் குறை சொல்லவில்லை என்றும் எதிர்ப்பு தெரித்து பேரணி நடத்தினர். இதில், மருத்துவர்கள், மருத்துவதுறை பணியாளாகள் கலந்து கொண்டனர்.