Employment Vaccant in Perambalur District Child Protection Unit

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வே. சாந்தா விடுத்துள்ள தகவல்:

பெரம்பலூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு பல்வேறு பதவிகள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிரப்பப்படவுள்ள காலிப்பணியிடங்கள் மற்றும் தொகுப்பூதியம்:

1. பாதுகாப்பு அலுவலர் : 2 (1+1) பதவிகள் (தொகுப்பூதியம் (நிறுவனம் சார்ந்த பராமரிப்பு மற்றும் ரூ.21000 ஒரு மாதத்திற்கு) நிறுவனம் சாரா பராமரிப்பு)
2. சமூகப்பணியாளர் : 2 பதவிகள் (தொகுப்பூதியம் ரூ.14000 ஒரு மாதத்திற்கு)

3. புறத்தொடர்பு பணியாளர் : 2 பதவிகள் (தொகுப்பூதியம் ரூ.8000 ஒரு மாதத்திற்கு)

கல்வித் தகுதி, அனுபவம் மற்றும் வயது: பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சார்ந்த பராமரிப்பு மற்றும் நிறுவனம் சாரா பராமரிப்பு) பட்டதாரி / முதுநிலை பட்டதாரி (10+2+3 மாதிரி)

குற்றவியல் / கல்வியியல் / குழந்தை வளர்ச்சிஃ உளவியலாளர் / சமூகப்பணி / சமூகவியல்களில் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தொழில், கல்வி, சமூகநலம், குழந்தைநலம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் மூன்று வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்.

வயது -01.04.2020 அன்று 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது. (பொது விண்ணப்பதாரர்களுக்கு) ஆ பிரிவு அல்லது அதற்கு மேற்பட்ட அலுவலர் நிலையில் அனுபவம் மிக்க ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம். வயது -01.04.2020 அன்று 62 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது (ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு)


சமூகப்பணியாளர் : பட்டதாரி / முதுநிலை பட்டதாரி (10+2+3 மாதிரி) உளவியல் + சமூகப்பணி + சமூகவியல்களில் + வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தை சார்ந்த பணியில் இரண்டு வருடம்; பணிபுரிந்த அனுபவம் வேண்டும்.

வயது -01.04.2020 அன்று 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது (பொது விண்ணப்பதாரர்களுக்கு)


புறத்தொடர்பு பணியாளர் : பத்தாம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குழந்தை சார்ந்த படிப்பு பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

குழந்தை சார்ந்த பணியில் ஒருவருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது -01.04.2020 அன்று 40 வயதிற்கு மேற்பட்டவா;களாக இருத்தல் கூடாது (பொது விண்ணப்பதாரர்களுக்கு)

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள்www.perambalur.tn.nic.in என்ற வலைதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 31.03.2020 அன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, 164, இரண்டாவது தளம், எம்.எம்.பிளாசா, திருச்சி மெயின் ரோடு, பெரம்பலூர் – 621212 என்ற முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!