Farmer slaughter case in land dispute near Perambalur 7 sentenced to life imprisonment including woman

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள பாலையூர் கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் கந்தசாமி (வயது 34). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த செல்வராஜிக்கும் இடையே ஏற்பட்ட நிலத்தகராறில் முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 17ம்தேதி மாலை 6 மணியளவில் வயலில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த கந்தசாமியையும், அவரது தம்பி ராமச்சந்திரன் ஆகியோரை செல்வராஜ் மற்றும் அவரது உறவினர்கள் கும்பல் அரிவாளால் வெட்டி தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே கந்தசாமி படுகொலையானார். படுகாயமடைந்த ராமச்சந்திரன் சிகிச்சை பெற்று உயிர் தப்பினார்.

இது குறித்து வி.களத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக் குற்றவாளிகளான பாலையூரை சேர்ந்த ராமையா மனைவி நல்லக்கண்ணு (வயது 60). இவரது மகன்கள் செல்வராஜ் (44), சுந்தர்ராஜ் (37), மாணிக்கம் மகன்கள் நல்லூசாமி (52), செல்லப்பிள்ளைடிடி(50), வேப்பந்தட்டையை சேர்ந்த ராமச்சந்திரன் மகன்கள் தங்கராசு (38), மணிகண்டன் (36) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

இந்த வழக்கு பெரம்பலூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் அரசு வக்கீல் வினோத்குமார் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியானது. இதில் விவசாயியை வெட்டி படுகொலை செய்த செல்வராஜ் உட்பட 7 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 3 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுவிக்கவேண்டும் என நீதிபதி மலர்விழி உத்தரவிட்டார். இதையடுத்து 7 பேரும் திருச்சியில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!