Farmers complain to Perambalur Collector that VAO is asking for bribe to mark well on FMP map!

பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார் (40)/ விவசாயி, இவரின் தலைமையில் 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களுக்கு மேலப்புலியூர் கிராமத்திற்கு உட்பட்ட, மேற்கு எல்லையில் வயல்கள் இருப்பதாகவும் காலம்காலமாக கிணற்று பாசனம் செய்து வருவதாகவும், தற்போது பயிர் கடன் பெறுவதற்காக அடங்கல் பெற கிராம நிர்வாக அலுவலகம் சென்ற பொது அடங்களில் மேட்டாங்காடு என்று கிராம நிர்வாக அலுவலர் (முருகவேல்) குறிப்பிட்டு கொடுத்ததோடு, அதற்கு கிணற்றுப் பாசனம் என கூறுவதோடு, FMP Map ல் கிணறு இல்லை என்று கூறி அப்போது ரூபாய் 1000 வாங்கிக்கொண்டு அடங்கல் கொடுத்ததாகவும், நிரந்தரமாக கிணற்றினை FMP Map ல் காட்டுவதற்கு ரூபாய் ரூ.3000 பணம் கேட்கிறார் என்றும், அவர் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். மனுக்களை பெற்ற வருவாய் துறை நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!