Fined Rs.90 thousand to Bank; Borrower ransom near Perambalur : Consumer Order

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி மகன் கலாநிதி (வயது 29). டிரைவரான இவர் சொந்தமாக டாடா சுமோ கார் வாங்க தாட்கோ மூலம் கடன் கேட்டு, லாடபுரம் கிராமத்திலுள்ள இந்தியன் வங்கிக்கு கடந்த 22.01.2016ந்தேதி விண்ணப்பித்திருந்தார்.

இந்தநிலையில் கடன் கேட்டு விண்ணப்பித்த கலாநிதி அளித்த விண்ணப்பத்தின் மீதான நிலை குறித்து தாட்கோ மோலாளருக்கு தகவல் தெரிவிக்காமலும், கடன் வழங்காமல் நான்கு மாத காலம் வங்கி மேலாளர் உள்ளிட்ட வங்கி அதிகாரிகள் கலாநிதியை அலைக்கழித்துள்ளனர்.

இதன் காரணமாக மன உலைச்சலுக்கு ஆளான கலாநிதி கடந்த 02.06.2016ந்தேதி பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இழப்பீடு பெற்றுத்தர வலியுறுத்தியும் வழக்கு தொடர்ந்தார். இதனைத்தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் முடிவில், கடன் வழங்காமல் அலைக்கழித்த லாடபுரம் இந்தியன் வங்கி, கடன் கேட்டு விண்ணப்பித்த கலாநிதிக்கு 75 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், 15 ஆயிரம் ரூபாய் வழக்கு செலவும் என மொத்தம் 90 ஆயிரம் ரூபாயை 2 மாத காலத்திற்குள் வழங்க வேண்டுமென்றும், கடன் வழங்காமல் அலைக்கழித்த லாடபுரம் இந்தியன் வங்கி வங்கி மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதி மன்ற தலைவர் தர்மர் மற்றும் உறுப்பினர்கள் ஜெயலட்சுமி, அப்துல்காதர் ஆகியோர் உத்தரவிட்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!