Five persons arrested for plundering home and stores due to unemployment

பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள உப்போடை பகுதியில், கூட்டாக அமர்ந்து கொண்டு 5 பேர் ஏதோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள், போலீசாரின் வாகனத்தை கண்டதும் தப்பி ஓடினர். இதைக்கண்ட போலீசார் அவர்களை வளைத்துப் பிடித்து விசாரணை நடத்தியதில், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள இந்த காலத்தில் தங்களுக்கு வேலை சரியாக இல்லாத காரணத்தினால் ஏதேனும் வீடு அல்லது கடைகளில் கொள்ளை அடிக்கலாமா என திட்டம் தீட்டியதாக தெரியவந்தது. மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், பெரம்பலூரை சேர்ந்த செல்வக்குமார் (வயது 30), பிரசாந்த் (23), சந்தோஷ்குமார் (23), மணிகண்டன் (31), உமாமகேஸ்வரன் (45) என்பதும் தெரிந்தது. அவர்களிடம் இருந்து 2 அருவாள் மிளகாய் பொடி போன்றவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக பெரம்பலூர் காவல் உதவி ஆய்வாளர் செந்தமிழ்ச்செல்வி கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் காவல் ஆய்வாளர் (பொ) சுகந்தி வழக்கு பதிவு செய்து, 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!