பெரம்பலூர் : பெரம்பலூர் நகர காவல் துறையை கண்டித்து, பெரம்பலூரில் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள் இன்று கடையப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் பூசாரி தெருவில் நகைக் கடை வைத்துள்ள ஜோதிலெட்சுமி என்பவர் மீது, பொய்யான குற்றசாட்டு சுமத்திய பெரம்பலூர் காவல் துறையின் செயல்பாட்டை கண்டித்து, நகைக் கடை உரிமையாளர்கள் தங்களது கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், நகரில் உள்ள நூறுக்கும் மேற்பட்ட நகைக் கடைகள் மூடப்பட்டிருந்தது.