Guidance Group Meeting on behalf of the FSSAI Department of Perambalur

பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் வழிகாட்டும் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் (பொ) அழகிரிசாமி மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் குழு உறுப்பினர்களான துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்), மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (சத்துணவு), பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர், ஆதி திராவிட நலத்துறை அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், அமராவதி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாளர் கண்காணிப்பாளர் காவல்துறை, வட்டார போக்குவரத்து துறை அலுவலர், நுகர்வோர் சங்க நல பிரதிநிதி, உணவு விடுதிகள் நல சங்க பிரதிநிதி மற்றும் உணவு வணிகர்கள் சங்க நல பிரதிநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தனியார் மற்றும் அரசு துறையினர் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவுச்சான்றிதழ் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், உரிமம் மற்றும் பதிவுச்சான்றிதழ் பெற்றவர்கள் முன்புறம் மாட்டிவைக்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து தனியார் மற்றும் அரசு துறையினரும் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை, வாட்ஸ்அப் எண் 9444042322 பற்றிய விழிப்புணர்வு, லேபிள் பற்றிய விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

மேலும், ஆவின் நிறுவனங்கள் பதிவு சான்றிதழ், உரிமம் பெற அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு பதிவு சான்றிதழ், உரிமம் பெறாதவர்களுக்கு உணவு பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டத்தின்படி நோட்டீஸ் அளிக்க மாவட்ட ஆட்சியரால் வலியுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் சவுமியசுந்தரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கலைச்செல்வி, காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!