Hi-tech near the Perambalur – lightning fast helmet thieves: handcuffs in 7 homes 5 pound 10 thousand cash robbery! 10 pound jewel escapes.

பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தில் ஹைடெக் – மின்னல் வேக ஹெல்மெட் திருடர்கள் தைஅமாவாசையில் 7 வீடுகளில் கைவரிசை காட்டியுள்ளனர். இதனால், அதிகாலை அந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்றிரவு எசனையில் முகாமிட்ட திருடர்கள், மின்னல் வேகத்தில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட பைக்குகளில் வீதிவீதியாக வலம் வந்து பூட்டிய வீடுகளை குறி வைத்து கொள்ளையடித்தனர்.

வீட்டின் பூட்டுகளை அனாசயமாக உடைத்தும், பக்கத்து வீட்டுக்காரர் சத்தம் கேட்டால் எழுந்து வராமல் இருக்க தாழ்ப்பாள்களை போட்டும் வைத்தும் வீடுகளில் புகுந்த கொள்ளை கும்பல், கிராம மக்கள் நள்ளிரவில் கடும் குளிரில் வீடுகளில் முடங்கி உறங்கி கொண்டிருந்த வேளையில் சாகசங்களை நிகழ்த்தினர்.
நள்ளிரவு 2 மணியளவில், எசனை கடைவீதி அருகே கந்தசாமி என்பவர் விழுப்பும் மாவட்ட காவல் துறையில் பணிபுரிந்து வருகிறார். பூட்டியிருந்த அவரது வீட்டை உடைத்த திருடர்கள் உள்ளே நுழைந்து சூறையிட்டனர். அதே போல், கீழக்கரை பகுதியில் உள்ள அமாவாசை என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள் கொள்ளையடித்து சென்றர். வீட்டின் உரிமையாளர்கள், கந்தசாமி, அமாவாசை உறவினர் வீட்டிற்கு சென்றிருப்பதால், வீட்டில் திருடு போன பொருட்களின் மதிப்பு தெரியவில்லை. எசனை வடக்குத் தெரு ராஜேந்திரன் (42). பெரம்பலூரில் உள்ள ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராணி (35) என்பவர் தைஅமாசையை முன்னிட்டு காலையில் விரதம் இருப்பதற்காக நள்ளிரவே வீட்டின் தரை தளத்தை கழுவி விட்டு, மேல்மாடியில் படுத்து கொண்டனர். இதை நோட்ட திருட்டுக் கும்பல் வீட்டின் பூட்டை சுமார் 5 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரொக்கம் ரூ. 10 ஆயிரத்தையும் கொள்ளையடித்தனர்.

பின்னர். அடுத்த தெருமுனையில் உள்ள வரதராஜ் என்பவர் ஒரு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அவரது மற்றொரு வீட்டின் பூட்டை உடைத்த திருடர்கள், சத்தம் கேட்டால் வெளிவந்துவிடக் கூடாது என்பதற்காக வரதராஜ் இருந்த வீட்டை வெளியே தாழிட்டு சென்றனர். வீட்டினுள் சென்ற கொள்ளையர்களுக்கு எதுவும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வெறும் கையுடன் வெளியேறினர். ஆனால், வரதராஜ் நேற்றுதான் பருத்தி போட்டு அடமானம் வைத்திருந்த நகைகளை அங்கு வைக்காமல் பக்கத்து வீட்டில் வைத்திருநதார். அதனால் 10 பவுன் நகை தப்பபியது. அதனால் ஆத்திமடைந்த திருடர்கள் அந்த வீட்டருகே உள்ள முருகேசன் என்பவர் திருவண்ணாமலையில் உள்ள மடத்தில் வேலை தொண்டராக உள்ளார். அவரது வீட்டின் பூட்டை உடைத்து, கொள்ளையடித்தனர். வீட்டின் உரிமையளர் பெரம்பலூர் நோக்கி வந்து கொண்டிருப்பதால், அவரது வீட்டில் ரூ.30 ஆயிரம் திருடு போனதாக கூறப்படுகிறது. மேலும், திருடு போன விவரங்கள் தெரியவில்லை. இது அருகே உள்ள மற்றொரு வீட்டில் சேகர் என்பவர் கீழ்வீட்டை பூட்டி விட்டு சேகர் தனது குடும்பத்தாருடன் மேல்மாடியில் படுத்து இருந்தார். அதனை மோப்பம் பிடித்து கீழ்வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள் , வீட்டினுள் பீரோவை உடைத்து, துணிமகள் பொருட்களை சூறையாடினர். ஆனால், அவர்களுக்கு அங்கு வெள்ளி அரைஞாண் கயிறு மட்டுமே கிடைத்து. அதை கைப்பற்றிய திருடர்கள், திருப்தி அடையாமல், அடுத்து ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுனர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வீட்டின் பூட்டை உடைத்த திருடர்கள் மேஜை டிராயரை எடுத்த சென்ற கொள்ளைக்கும்பலுக்கு வெறும் 11 ரூபாய் மட்டுமே கிடைத்தது. அதை அப்படியே விட்டுவிட்டு சென்ற திருடர்கள் பைக்கில் கிளம்பும் சத்தம் கேட்டு கிருஷ்ணமூர்த்தி கண் விழித்து வீட்டிற்கு வெளியே வந்த மற்றொரு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதை அறிந்த அவர் பார்த்து கொண்டு இருக்கும் வேளையில் திருடர்கள் மீண்டும் அவரது வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது திருடர்களை திருட்டுப்பயல்கயே வாங்கடா என சத்தம் போட்டவுடன் திருடர்கள் மின்னல்வேகத்தில் வந்த பைக்குகளில் மாயமாய் மறைந்தனர். இதற்குள் அக்கம் பக்கத்தினர் தகவல் அறிந்து விழித்து எழுந்த கிராம மக்கள் பெரம்பலூர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையில் வந்த போலீசார் மோப்ப நாய், கைரேகை மற்றும் தடய அறிவியல் நிபுணர்களுடன் வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புதிய கொள்ளை கும்பல் கையுறை, பூட்ஸ், ஷொட்டர்கள் உள்ளிட்டவைகளை அணிந்து வந்ததால், அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், விசாரணையை தீவிரமாக முடக்கி விட்டுள்ளனர். இச்சம்பவம், எசனை – கீழக்கரை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!