If children under the age of 14 are employed, the cost is Rs. 50 thousand fine; 2 years in prison; Judge M. Vinodha Information

Model Photo

சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், நீதிபதியுமான எம். வினோதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.

ஒவ்வொரு ஆண்டும் ஜூ ன் 12 இன்று குழந்தை தொழிலார்களுக்கு எதிரான நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எந்தவொரு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள் மற்றும் எவ்வித வேலைக்கும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணியில் ஈடுபடத்தக்கூடாது. எவரேனும் குழந்தைகளை பணியில் அமர்த்தினால் அது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

குழந்தைத் தொழிலாளர் தடுப்பு சட்டத்தின்படி, 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எவ்வித பணியிலும் ஈடுபடுத்துவது குற்றம். 15 – 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

குழந்தைகளை எவ்வித தொழிலிலும் ஈடுபடுத்தினாலும் வளர் இளம்பருவத்தினரை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத் தினாலும் அபராதம் ரூ.50,000/- சிறை தண்டனை 2 ஆண்டுகள் வரை விதிக்கப்படும். மேலும், 15 வயது முதல் 18 வயது வரை உள்ள வளரிளம் குழந்தைகளை குறிப்பாக பெண் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தும் பொழுது அவர்களுக்கு உரிய பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும். அவர்களுக்கெதிராக எந்த விதமான பாலியல் குற்றங்களும் நடைபெறாமல் பாதுகாக்கப்பட வேண்டும். 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டாய அடிப்படைக் கல்வி வழங்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். யாராக இருந்தாலும் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது தண்டனைக்குரிய குற்றமாகும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!