பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் 120 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவில், கர்ப்பிணி பெண்களுக்கு ஐந்து வகையான உணவுகள் பரிமாரப்பட்டது. மேலும், கர்ப்பகால பராமரிப்பு, தாய்ப்பாலின் அவசியம், இணை உணவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விரிவாக எடுத்து உரைக்கப்பட்டது. அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் மருத்துவ மனையின் தொலைபேசி எண்கள், குழந்தைகளின் எடை விபரங்கள் அடங்கிய கையேடு வழங்கப்பட்டது. மேலும் இன்று பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள நான்கு வட்டாரங்களிலும் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகளில் 520 கர்பிணித் தாய்மார்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மக்கள் பிரதி நிதிகள், அரசு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.