In Perambalur, Minister Sivashankar inaugurated new projects worth 10.43 crores!
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.10.44 மதிப்பிலான புதிய திட்டப்பணிகளை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று காலை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் தொடங்கி வைத்தார்.
கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டம் 2024-2025 ஆம் ஆண்டு திட்ட நிதியின் கீழ் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் 1,200 சதுர மீட்டர் பரப்பில் 1,000 வாகனங்களை நிறுத்தும் வகையில் மேற்கூரையுடன் கூடிய இருசக்கர வாகன நிறுத்தம் கட்டும் பணி, பேருந்து நிலையத்திற்குள் மழைநீர் தேங்காத வகையில் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள், உயர்மின் கோபுர விளக்குகள், பேவர்பிளாக் சாலை உள்ளிட்ட பணிகள் ரூ.473 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து நிலைய மேம்பாட்டு பணிகள் இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர், தமிழ்நாடு நகர்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.570.64 இலட்சம் மதிப்பீட்டில் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் 8.357 கிலோ மீட்டர் நீளத்திற்கு தார்ச்சாலை அமைக்கும் பணியும், 7.567 கிலோ மீட்டர் நீளத்திற்கு பழுதடைந்த சிமெண்ட் சாலைகளை தார்ச் சாலைகளாக மாற்றும் பணிகளை துறைமங்கலம் பள்ளிவாசல் தெருவில் நடைபெற்ற பூமி பூஜையை நிகழ்வில் திட்ட பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர் எம்.பி. கே.என்.அருண்நேரு, பெரம்பலூர் எம்.எல்ஏ. ம.பிரபாகரன், மாநில பொறியாளர் அணி பரமேஷ்குமார், நகராட்சித் தலைவர் அம்பிகா இராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம்.சி.இரஜேந்திரன், நகராட்சி துணைத் தலைவர் ஆதவன் (எ) ஹாரி பாஸ்கர், நகராட்சி கமிஷனர் வே.ராமர், கவுன்சிலர்கள் ஷகர் பானு, சுசீலா, ராகவி சந்திரலேகா, சவுமியா, சேகர், சித்தார்த்தன், ஷாலினி, சண்முகசுந்தரம், ஜெயப்பிரியா, மணிவேல், சசி இன்பென்டா, நல்லுசாமி, ரகமத்துல்லா, சிவகுமார், சித்ரா, மற்றும் நகராட்சி பணியாளர்கள்,
திமுக பொதுக் குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் அழகு நீலமேகம், யூனியன் சேர்மேன்கள் ஆலத்தூர் கிருஷ்ணமூர்த்தி, வேப்பூர் பிரபா செல்லப்பிள்ளை, பெரம்பலூர் மீனா அண்ணாதுரை, மாவட்ட கவுன்சிலர் தழுதாழை பாஸ்கர், வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, வேப்பூர் மதியழகன், பெரியம்மா பாளையம் ரமேஷ், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் களத்தூர் வி. கார்மேகம், வக்கீல் கண்ணன், மாவட்ட இளைஞரணி சிவசங்கர், சுப்பிரமணியன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.