In the case of the murder yesterday AMMK Party Personality 4 persons surrendered in the court Karur
பெரம்பலூர் ரோவர் ஆர்ச் பகுதியிலிருந்து விளாமுத்தூர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் தனியார்(ஜோசப்) பள்ளி எதிரே வயல் வெளிப்பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த விளையாட்டு மைதானத்தில், நண்பர்களுடன் கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்த பெரம்பலூர் சங்கு பேட்டை பகுதியை சேர்ந்தவரும் அமுமுக பெரம்பலூர் நகர மாணவரணி செயலாளருமான பாண்டி(எ)வல்லத்தரசுவை 10 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியது.
இந்த திடீர் தாக்குதலில் பாண்டி(எ) வல்லத்தரசு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இந்த தாக்குதல் சம்பவத்தின் போது படுகாயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வல்லத்தரசுவின் நண்பரான சூர்யா அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய பிரகாஷ், விஜயராஜ், காக்கா கார்த்தி, கஞ்சா ராஜா, ஆகியோர் கரூர் ஜேஎம் 2 நீதிமன்றத்தில் நீதிபதி சரவணபாபு முன்னிலையில் சரணடைந்தனர். அவர்களை நீதிபதி குளித்தலை சிறையில், 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.