Isha Rejuvenation Cup tournament in Namakkal
நாமக்கல்லில் ஈஷா புத்துணர்வு கோப்பை விளையாட்டு போட்டிகள் துவங்கியது.
ஈஷா கிராமோத்சவம் ஈஷாவின் கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்படுகிறது. கிராம மக்களின் ஆரோக்கியம் மற்றும் அவர்களின் பொருளாதார, சமுதாய மேம்பாட்டிற்காக ஈஷாவின் கிராமப் புத்துணர்வு இயக்கம் செயல்பட்டு வருகிறது.
கிராம புத்துணர்வு இயக்கம் சார்பில் ஆண்டு தோறும் ஆண்களுக்கு வாலிபால் போட்டியும், பெண்களுக்கு த்ரோபால் விளையாட்டு போட்டியும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு ஈஷா புத்துணர்வு கோப்பை வாலிபால் விளையாட்டு போட்டி நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று துவங்கியது. விளையாட்டு போட்டியை கொண்டம்பட்டி ராஜா துவக்கிவைத்தார். இப்போட்டிகள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுக்காவிலும் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
இதில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ. 6 ஆயிரமும், இரண்டாமிடம் பெறுபவருக்கு ரூ. 4 ஆயிரமும், மூன்றாமிடம் பெறுபவருக்கு ரூ.3 ஆயிரமும் மற்றும் நான்காமிடம் பெறுபவருக்கு ரூ. 2 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
பெண்களுக்கான த்ரோபால் விளையாட்டு போட்டி வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் தாலுக்கா அளவில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஈரோட்டில் வரும் டிசம்பர் 9ம் தேதி சர்குரு தலைமையில் இறுதிப்போட்டிகள் நடைபெறுகிறது.
போட்டிகளுக்கான ஏற்பாடுகளை நாமக்கல் ஈஷா மைய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்துள்ளனர்.