It’ll be involved in the sale of alcohol near the Supervisory plea to violating the curfew, including Salesmen arrested 8 persons

பெரம்பலூரில், ஊரடங்கு உத்தரைவை மீறி அரசு மது பான பாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த 8 பேரை பெரம்பலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும், 144 தடை உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் அருகே கோனேரிப்பாளைத்தில், மது விற்பனை நடப்பதாக ரகசிய தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் சுப்பையா தலைமையில் சென்ற பெரம்பலூர் போலீசார் வயலில் மது விற்பனை செய்து கொண்டிருந்த 4 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில், இந்நிலையில் பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் உள்ள அரசு மதுபானக்கடையின் சூப்பவைசர் செல்வேந்திரன் (வயது 50), சேல்ஸ்மேன்கள் அழகுவேல் முத்துசாமி, ஆகிய மூன்று பேரும் கை.களத்தூரை சேர்ந்த ராஜமாணிக்கம் (வயது 43) என்பவரிடம். மதுபான பெட்டிகளை கொடுத்து பதுக்கி வைத்துல்விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக வந்த தகவலின் பேரில் கோனேரிப்பாளைத்தை சேர்ந்த தீபக், சிலம்பரசன், கார்த்திகேயன், பெரம்பலூரை சேர்ந்த பீரவீன் ஆகிய 4 பேரும் ராஜமாணிக்கத்திற்கு உடந்தையாக பணிபுரிந்து உள்ளனர். அவர்களிடமிருந்து 701 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். இது குறித்து மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!