Karl Marx 200th Anniversary Seminar on Perambalur on behalf of CPI

உலக தத்துவமேதை உழைப்பாளி மக்களின் விடிவெள்ளி காரல்மார்க்ஸின் 200 வது ஆண்டு நிறைவு விழா இன்று பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

மாவட்ட செயலாளர் ரா.மணிவேல் தலைமை வகித்தார். முன்னதாக வட்ட செயலாளர் எஸ்.பி.டி.ராஜாங்கம் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.அழகர்சாமி, என்.செல்லதுரை, எஸ்.அகஸ்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பி.ராஜேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது வர்க்கரீதியில் மனித குலம் உருவாகவும் காரல்மார்க்ஸ் உலகத்திற்கே ஒரு எடுத்துக்காட்டு என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

மேலும் கம்யூனிச சித்தாந்தமும் மார்க்சிஸ தத்துவமுமே மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு என்பது குறித்து என்ற சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள் இராஜகுமாரன் எ.கணேசன் உள்பட மாவட்டக்குழு இடைக்கமிட்டி உறுப்பினர்கள் கிளை செயலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!