Kidnapping and murder of a youth, Rowdy sentenced to life imprisonment Perambalur Court Judgement.

தஞ்சாவூர் அருகே கடத்திய இளைஞரை பெரம்பலூர் அழைத்துவந்து கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில், பிரபல ரவுடிக்கு பெரம்பலூர் மகளிர் நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள மாவடுகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அறிவழகன் (வயது 38). இவருக்கும், பெரம்பலூரைச் சேர்ந்த பிரபல ரவுடி அழகிரி என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 6.2.2016 அன்று அறிவழகன், பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் கோனேரிப்பாளையம் செல்லும் வழியில் உள்ள தனியார் பெட்ரோல் அருகே முள்புதரில் கழுத்து அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
முன்விரோதம் காரணமாக அறிவழகனை கடத்தி கொலை செய்ததாகக் கூறி பெரம்பலூரைச் சேர்ந்த பிரபல ரவுடி அழகிரி (வயது 37), பெரம்பலூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து இளைஞரை கடத்தி வந்து கொலை செய்ததாக அழகிரியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பான வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இளைஞரை கடத்தி கொலை செய்த அழகிரிக்கு ஆயுள் தண்டனை விதித்தும், மேலும் இவ்வழக்கில் சேர்க்கப்பட்ட இளங்கோவன், சாமிமலை, தீபன், தீபக், சக்திவேல், சசிகரண், ரவிகரன் உள்பட11 பேரை விடுதலை செய்வதாக அறிவித்தும் மகளிர் நீதிமன்ற நீதிபதி மலர்விழி உத்தரவிட்டார். இதையடுத்து அழகிரி போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!