Kunnam Co-operative Societies Milk producer and Milchers for specialty medical camp
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராமத்தில் உள்ள குன்னம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி சார்பில் இன்று குன்னம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை பெரம்பலூர் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளரும், குன்னம் எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். சிதம்பரம் தொகுதி எம்.பி மா.சந்திரகாசி தலைமை வகித்தார். முகாமில், பால் கூட்டுறவு சங்கத் தலைவர் குன்னம் குணசீலன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அமுதா முருகேசன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் இளங்கோவன், பால் கூட்டுறவு சங்க செயலாளர் சி.ராஜாராம், பேரளி துரைக்கண்ணு, சித்தளி நடராஜன், ஆவின் மேலாளர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முகாமில், பால் கறவையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர் குடும்பங்களுக்கு பொது மருத்துவம், நுரையீரல் அடைப்பு நோய், பக்கவாதம், ஆஸ்துமா, அதிகப்படியான நுரையீரலில் சளி, ரத்த வழி பரவும் தோல் நோய், உயர் ரத்த அழுத்தம், நீரழிவு, உடல் பருமன், திடீரென உடல் வியர்த்தல், கொழுப்பு சத்து, மனஅழுத்தம், குறைந்த உடல் உழைப்பு, புகைப்பிடித்தல், குடிப்பழக்கம் உள்ளிட்ட நோய்களுக்கான பரிசோதனைகளும், பி.பி, ஈ.சி.ஜி, ஆகியவை முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு எடுக்கப்பட்டு, சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.