Kunnam MLA RT. Ramachandran opened the part-time ration shop near Perambalur.
பெரம்பலூர் அருகே உள்ள கரம்பியம் கிராமத்தில் பகுதி நேர ரேசன் கடையை குன்னம் எம்.எல்.ஏ ஆர்.டி.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம் பெரியம்மாபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கரம்பியம் கிராமத்தில், அப்பகுதி மக்களின் நீண்ட நாளை கோரிக்கையை ஏற்று இன்று புதிய பகுதிநேர ரேசன் கடையை பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன் இன்று திறந்து வைத்தார்.
232 குடும்ப அட்டைகளை கொண்ட கரம்பியம் கிராமத்தினர் 2 கி.மீ தொலைவில் உள்ள பெரியம்மாபாளையம் ரேசன் கடைக்கு சென்று வந்ததாகவும், பகுதி நேர ரேசன் கடையால் அலைச்சல் குறைவதோடு நாளும் மிச்சமாகும் என்றவர்கள், பகுதிநேர ரேசன் கடை திறக்க நடவடிக்கை எடுத்த குன்னம் எம்.எல்.ஏ ஆர்.டி.ராமச்சந்திரனுக்கு நன்றி தெரிவித்தனர்.
புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் திறக்கப்படும் இக்கடை தற்போது தனியாருக்கு சொந்தமான வாடகை கட்டிடத்தில் இயங்கும் ரேசன் கடைக்கு, வரும் ஆண்டுகளில் எம்.எல்.ஏ வின் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அப்போது கிளைக்கழக நிர்வாகிகள், குன்னம் குணசீலன் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.