local body workers demanding hikes wage announced in Demonstration for pay infront of perambalur collectorate gate
அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வினை வழங்க கோரி மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி, மின்மோட்டார் இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் இன்று பெரம்பலூரில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்தினர்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று காலை மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி, மின்மோட்டார் இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் அறிவிக்கப்பட்ட 7 வது ஊதியக்குழு உயர்வினை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து கலைந்து சென்றனர்.
இதில் ஏராளமான பணியாளர்கள் கலந்து கொண்டனர்.