Low cost plants, tree saplings to improve the environment; Perambalur Collector Information

மரங்கள் சுற்றுக்சூழலை பசுமையாக்குவதுடன் தூய்மைப்படுத்துகின்றன. மேலும் இவை மனிதர்கள், பறவைகள் மற்றும விலங்குகளுக்கு தேவையன பழங்கள், எரிபொருள், மருத்து மூலப்பொருட்கள் முதலியவற்றை வழங்குவதுடன் பறவைகளுக்கு வசிப்பிடமாகவும் திகழ்கிறது. மரங்கள் சுற்றுச்சூழலிலுள்ள கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் வாயுக்களின் அளவை கணிசமாக குறைப்பதுடன் மனிதர்களுக்கும், இதர உயிர்களுக்கு தேவையான ஆக்சிஜனை விடுவிக்கின்றன. மரங்கள் நடவு செய்வதால் ஒரு மரமானது தனது ஆயுட்காலத்தில் சுமார் 1 முதல் 16 ஜி டன் அளவு கார்பன்-டை-ஆக்ஸைடு உட்கிரகித்து உயிரினங்களுக்கு பயன்படும் ஆக்சிஜனை தருகின்றன.

சமீப காலமாக விழாக்கள், பண்டிகைகள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளின்போது அத்தின சிறப்பை நினைவு கூறும் வகையில் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு மரக்கன்றுகள், பழக்கன்றுகள் வழங்குவது பிரபலமடைந்து வருகிறது. தமிழ்நாட்டில் விழாக்கள், பண்டிகைகள், திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகள் அதிக அளவில் கொண்டாடப்படுகின்றன. இந்நிலையில் விழாக்களுக்கு வரும் விருந்தினர்களுக்கு மரக்கன்றுகள், காய்கறி நாற்றுகள் மற்றும் பழச்செடிகள் தரும் பண்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக நடப்பாண்டில், தமிழ்நாடு தோட்டக்கலை துறை விழாக்கள், பண்டிகைகள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு தோட்டக்கலை சார்ந்த நடவுச் செடிகள், பழச்செடிகளை தரமானதாகவும், குறைந்த விலையிலும் வழங்கி வருகிறது.

தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின்கீழ் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் கட்டுப்பாட்டில் (டான்ஹோடா) 63 அரசு தோட்டக்கலை பண்ணைகளும் 19 பூங்காக்களும் செயல்பட்டு வருகின்றன. இப்பண்ணைகளில் நெல்லி, சப்போட்டா, மாதுளை, புளி, எலுமிச்சை, நாவல் மற்றும் விளாம்பழம் போன்ற நமது பாரம்பரிய பழக்கன்றுகளும், கருவேப்பிலை, கொடுக்காப்புளி, முந்திரி, வேம்பு, மரவேம்பு, புங்கம், தேக்கு மற்றும சவுக்கு போன்ற மரங்களும், மல்லிகை, வெட்சி மற்றும் அரளி போன்ற பூச்செடிகளும் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. இது போன்ற நடவுச் செடிகள் தவிர பல்வேறு பழக்கன்றுகள் மற்றும் இதர தோட்டக்கலை பயிh;களின் நடவுச் செடிகள் விருப்பத்தின் அடிப்படையில் உற்பத்தி செய்து வழங்கப்படும்.

அரசு தோட்டக்கலை பண்ணைகளில் அழகுச்செடிகள் ரூ..5 முதல் ரூ.10 வரையிலும், வேம்பு, புங்கம் போன்ற மரச்செடிகள் ரூ.10 முதல் ரூ.20 வரையிலும், பழச்செடிகள் ரூ.8 முதல் ரூ.60 வரையிலும், மலா;ச்செடிகள் ரூ.8 முதல் ரூ.30 வரையிலும் விற்கப்படுகிறது.


இத்திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கலம் அரசு தோட்டக்கலை பண்ணைகளின் மூலம் இதுவரை இந்த ஆண்டு மட்டும் 4500 மரக்கன்றுகள், பழக்கன்றுகள் சுப நிகழ்ச்சிகளுக்கு குறைந்த விலையில் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. எனவே, வாடிக்கையாளர்கள் தங்களது வட்டார அளவில் செயல்படும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ அல்லது மாவட்ட அளவிலான தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகத்தையோ அணுகி இத்திட்டத்தின்கீழ் பயனடைய முன்பதிவு செய்துகொள்ளாம்.

இது தவிர இ-தோட்டம் செயலி வாயிலாகவும் நேரடியாக பண்ணைகளில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இத்திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களை http://tnhorticulture.tn.gov.in/ horti என்ற இணையதள முகவரியிலும், 18004254444 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பெற்றுக்கொண்டு இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!