Members of the former soldiers may apply for joining forces as joint officers.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:
முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு ஒருங்கிணைந்த முப்படைகளில் (Combined Defence Service) அதிகாரியாக சேர www.exweletutor.com என்ற இணையதளத்தின் மூலம் சிறப்பு பயிற்சி 6 மாதங்களுக்கு வழங்கப்படவுள்ளது.
பொறியியல் பட்டப்படிப்பு, கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு முடித்த, கல்லூரி இறுதியாண்டு பயின்று கொண்டிருக்கும் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் மேற்குறிப்பிட்ட இணையதளம் மூலம் பயிற்சி பெறலாம்.
இணையதளத்தில் விண்ணப்பிக்கும் தகுதியுடைய முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு login ID மற்றும் Password தனித்தனியாக அளிக்கப்பட்டு தேவைப்படும் வழிகாட்டுதல் மற்றும் விளக்கங்கள் அளிக்கப்படும்.
மேலும், மேற்கண்ட பயிற்சியில் சேர விருப்பமுள்ள பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் www.exweletutor.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, அதன் விபரத்தை அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு தெரிவித்து பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.