Okinawa Electric Scooters Protecting the Environment: Vijayalakshmi Motors Owner S. Karthick informed

பெரம்பலூர் ஒக்கினவா எலக்டிரிக் ஸ்கூட்டர்ஸ் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளரும், விஜயலட்சுமி மோட்டார்ஸ் உரிமையாளருமான எஸ்.கார்த்திக் தெரிவித்தாவது:

கடந்த ஆண்டு இந்தியாவில் 2 கோடி வாகனங்கள் விற்பனையாகி உள்ளது. இன்றைய சூழலில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை இரு சக்கர வாகன தேவை அத்தியாசமாகி உள்ளது. இந்த வாகனங்கள் வெளியாகும் நச்சுப் புகையால் சுற்றுச்சூழல் கடும் பாதிப்பு அடைந்து, அடுத்த தலைமுறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

ஒரு வாகனம் உண்டாக்கும் சுற்றுச்சூழல் மாசை சரி செய்ய 17 மரங்கள் தேவை. ஆனால், இது போன்று சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையிலும், போக்குவரத்து செலவை குறைப்பதிலும் தற்போது எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கப்பட்டு, அதிநவீன வசதிகளுடன் சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளன. பெட்ரோல் வாகனங்களை போலவே டிஸ்க் பிரேக், பிக்கப், வேகம், விரைவான சார்ஜிங் என பல்வேறு அம்சங்களுடன் ஒக்கினாவா ஸ்கூட்டர்கள் பெரம்பலூரில் விற்பனையாகி வருகிறது.

பொதுமக்கள் ஆர்முடன் சுற்றுச் சூழல், சிக்கனத்தை கருதி அதிக அளவில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ரூ. 43 ஆயிரத்தில் தொடங்கி ரூ. 1 லட்சத்து 27 ஆயிரம் வரையில் வெவ்வேறு மாடல்களில் அனைவரும் வாங்கும் வகையில் நிதியுதவி வசதியுடன் ஒரு பெட்ரொல் வாகனம் ஒரு லிட்டர் ஒன்றுக்கு சராசரியாக 40 கி.மீ மைலேஜ் கொடுக்கும், அதற்கு சுமார் ரூ.70 ல் இருந்து ரூ. 80 வரை செலவாகும். ஆனால் ஒக்கினாவா எலக்கிட்ரிக் ஸ்கூட்டரில் செல்ல இதே 40 கி.மீக்கு ரூ.1.50 மட்டுமே செலவாகும். மேலும், என்ஜின் ஆயில் போன்ற பராமரிப்பு செலவுகளும் கிடையாது. தற்போது வந்துள்ள லித்தியம் பேட்டரிகள் 5 ஆண்டுகள் வரை நீடித்து உழைக்க கூடியவை. ஒக்கினவா ஸ்கூட்டர்களில் அதிகபட்சமாக மணிக்கு 75 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டவை.

முன்னுதாரமாக ஆந்திராவில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் 100 ஒக்கினாவா எலக்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கி பரிசாக அளித்துள்ளது. அங்கு அவை சிறப்பாக இயங்கி வருகின்றன. தமிழகத்தில் அம்மா இரு சக்கர வாகனத்திட்டத்தில் ஒக்கினவா எலக்டிரிக் ஸ்கூட்டர்கள் மானியம் பெற தகுதியானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் பதிவும் செய்து கொள்ளலாம்.

வரும் சில ஆண்டுகளுக்குள் பேட்டரி வாகனங்களாக மாறிவிடும். மக்களும் பேட்டரி வாகனங்களுக்கு மாறுவதற்கு பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசும் சுற்றுச்சூழலை பாதுகாக்க பேட்டரி வாகனங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது. தற்போது வந்துள்ள ஒக்கினாவா ஸ்கூட்டர்களில் பெட்ரோல் வண்டிகளுக்கு ஈடான வேகம், மிக குறைந்த நேரத்தில் சார்ஜ் செய்யும் வசதி, வேகமான பிக்கப் போன்றவை மக்களை அதிகளவு கவர்ந்துள்ளது, என தெரிவித்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!