Padma Awards for Achievement in 2020: Perambalur Collector V.Shantha Information

பெரம்பலூர் கலெக்டர் வே. சாந்தா விடுத்துள்ள தகவல் :

தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் பல்வேறு துறைகளில் தலை சிறந்து விளங்குபவர்களுக்கும், சாதனை புரிந்தவர்களுக்கும் பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. கலை, இசை, ஓவியம், சிற்பம், புகைப்படம் எடுத்தல், சினிமா, நாடகம் ஆகிய துறைகளில் தேசிய அளவில் தனி திறமைகளை நிரூபித்தவர்களாக இருக்க வேண்டும். சமூக சேவை, சட்டம், பொது வாழ்வியல், அரசியல் ஆகியவற்றில் சேவை புரிந்தவர்கள், அறிவியல், விண்வெளி பொறியியல், அணு அறிவியல், தகவல் தொழில் நுட்பம் மற்றும் அதன் பொருள் சார்ந்த ஆய்வு ஆகிய துறைதளில் சாதனை படைத்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் வங்கி, பொருளாதார நடவடிக்கைகள், நிர்வாகம், சுற்றுலாத்துறை, வணிகம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களும், மருத்துவ ஆராய்ச்சி, ஆயுர்வேதம், ஹோமியோபதி, சித்தா, அலோபதி, இயற்கை மருத்துவத்தில் சாதனை படைத்தவர்களுக்கும், இலக்கியம், இதழியல், கற்பித்தல், புத்தகம் பதிப்பகம், கல்வியில் சீர்திருத்தம் படைத்தவர்களும், அரசு ஊழியர்கள் (குடிமைப் பணிகள்) மூலம் சிறப்பான நிர்வாகம் படைத்தவர்களும், விளையாட்டில் தடகளம், சாகச விளையாட்டு, பதவி உயர்வு பெற்று சாதனை படைத்தவர்களும் இவ்விருதிற்க்கு விண்ணப்பிக்கலாம்

அதேபோல் மலையேற்றம், விiளாயட்டுத் துறைகளை மேம்படுத்தியவர்கள், விளையாட்டை ஊக்கப்படுத்தியவர்கள், இந்திய கலாச்சாரம், மனித உரிமைகள் பாதுகாப்பு, வனபாதுகாப்பு மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு போன்ற சாதனை நிகழ்த்தியவர்களுக்கு பத்ம விருதுகள், பத்ம விபூஷன், பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ, ஆகிய விருதுகள் இந்திய அரசால் வழங்கப்படவுள்ளது. இவ்விருதுகள் வருகின்ற 2021 ஜனவரி 26 குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ளது.

எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவா;கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்கள் பெற இணையதள முகவரியான www.padmaawards.gov.in என்ற இணையதளத்தின் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் செப்.05 பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஒப்படைத்திட வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!