Perambalur: A laborer who was riding a bike to get a lift to work fell and died!
பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் கிராமத்தை சேர்ந்த அர்ஜுனன் இவருடைய மனைவி தனம் (60). இவர் கடந்த 9-ம் தேதி விவசாய கூலி வேலைக்கு செல்வதற்காக ஒருவரது பைக்கில் லிப்ட் கேட்டு சென்றார். அப்போது, திடீரென நிலைதடுமாறி பைக்கில் பின்னால் இருந்த தனம் தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். உடனே, அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த இன்று உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீசார், விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.