Perambalur: Adhav Public School annual function; Police SP attended and distributed prizes!
பெரம்பலூர் ஆதவ் பப்ளிக் பள்ளியின் ஆண்டுவிழா பள்ளி தாளாளர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. இயக்குனர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் சித்ரகலா ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக போலீஸ் எஸ்பி ஆதர்ஷ்பசேரா கலந்து கொண்டு சிறப்புரையாற்றி போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி துணைத் தாளாளர் பூமாபிரியா வரவேற்றார். உடற்கல்வி இயக்குனர் பிரணவ் நன்றி கூறினார்.