Perambalur: Karunanidhi’s birthday; Paying homage by garlanding his portrait at the District DMK office!

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, பெரம்பலூர் பாலக்கரையில் இருந்து ஊர்வலமாக மாவட்ட திமுக அலுவலகத்திற்கு வந்த திமுக தொண்டர்கள், அங்கு  வைக்கப்பட்டிருந்த தலைவர் கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த்தன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.இராஜ்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டுசெல்வி ராஜேந்திரன், எஸ்.அண்ணாதுரை, ஆர்.முருகேசன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், சன்‌.சம்பத், மாவட்ட ஒன்றிய செயலாளர்கள் எஸ்.நல்லதம்பி தி.மதியழகன், சி.ராஜேந்திரன், அரசு வழக்கறிஞர் ப.செந்தில்நாதன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆதவன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கவியரசு, மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் அப்துல் பாரூக், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் எம்‌.மணிவாசகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | Non-profit Organization | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!