Perambalur: Chief Minister MK Stalin inaugurated the Rs. 1.08 crore Animal Sterilization Center and Sub-Health Center via video conferencing!

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2025 – 26 ம் ஆண்டிற்கான கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பெரம்பலூர் நகராட்சியில் ரூ.63 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட விலங்குகள் கருத்தடை மையக் கட்டிடத்தையும், லப்பைகுடிக்காடு பேரூராட்சி பகுதியில் ரூ.45 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையம் கட்டடத்தையும் திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, பெரம்பலூர் கலெக்டர் ந.மிருணாளினி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். டி.ஆர்.ஓ கண்ணன், கால்நடை துறை இணை இயக்குனர் பேபி நிர்மல், அட்மா சேர்மன் வீ. ஜெகதீசன், நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன், நகராட்சி பொறியாளர் ரவி, துணைத் தலைவர் ஆதவன், நகராட்சி கவுன்சிலர்கள் சித்தார்த்தன், தங்க. சண்முகசுந்தரம், நல்லுசாமி, ரஹமத்துல்லா, ஜெயப்பிரியா, மணிவேல், மற்றும் திமுக பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் என்.ராஜேந்திரன் ஒப்பந்ததாரர், தழுதாழை சி. பாஸ்கர் மற்றும் லப்பைக்குடிக்காடு பேரூராட்சி தலைவர் ஜாகீர் உசேன், செயல் அலுவலர் ருக்மணி, துணைத் தலைவர் ரசூல் அஹமது, கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!