Perambalur: Collector orders action against quarry tipper trucks that violate rules! Runaway truck drivers!!

பெரம்பலூர் மாவட்டம், ஆதனூர் கிராமத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொள்ள கலெக்டர் ந.மிருணாளினி தனது காரில் சென்று கொண்டிருந்தார். அரியலூர் – பெரம்பலூர் சாலையில் கார் பேரளி அருகே சென்றபோது கலெக்டரின் காரை முந்திக்கொண்டு ஐல்லி கற்கள் ஏற்றிய லாரி ஒன்று வேகமாக சென்றது.

இதைத் கண்ட கலெக்டர் மிருணாளினி லாரியை மறித்து விசாரணை நடத்தினார். அப்போது கல் ஏற்றி செல்வதற்கான முறையான ஆவணங்கள் இல்லாமல் இருந்ததும், கற்களை உரிய முறையில் தார்ப்பாலின் போட்டு பாதுகாப்பாக எடுத்து செல்ல வேண்டுமென்ற விதிகளை பின்பற்றாமல் வாகனம் இயக்கப்பட்டதை தொடர்ந்து ஆர்.டி.ஓ மற்றும் தாசில்தார் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

மேலும், கலெக்டர் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்டு, கொட்டரையில் ஆய்வுப்பணிகளை முடித்துவிட்டு திரும்பும் போது சித்தளி அருகே கலெக்டரின் காரை பாரத்த 10க்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள் சாலையோரம் லாரிகளை நிறுத்தி விட்டு இறங்கி தப்பி ஓடி தலைமறைவாகினர். ஐல்லி கற்கள் மற்றும் எம்.சாண்டுகளை ஏற்றிக் கொண்டு வந்திருந்த நிலையில் கேட்பாரற்ற நிறுத்தப்பட்ட லாரிகளை பார்த்த கலெக்டர், உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்திரவிட்டார்.

பெரம்பலூரில் லாரிகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து விதிமுறைகளை பின்பற்றாமல் சாலையில் புழுதி பறக்க செல்வதும், லாரிகளில் இருந்து ஜல்லி கற்களை சாலையில் கொட்டிக் கொண்டே செல்வதும் பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு ஒன்றும் புதிதல்ல! இந்த கலெக்டராவது லாரிகளை கண்டிக்க செய்தாரே என பொதுமக்கள் பாராட்டத் தொடங்கி உள்ளனர்.


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!