Perambalur: Collector warns to avoid working in the fields during thunderstorms during the northeast monsoon!

வடகிழக்கு பருவமழை காலங்களில் டெங்கு, மலேரியா, டைப்பாயிடு போன்றகாய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் பொதுமக்கள் குடிநீரைக் காய்ச்சி குடிக்க வேண்டும். வீட்டைச் சுற்றிலும் குப்பைகள் இல்லாமலும், பராமரிப்பதோடு, தூக்கி எறியப்பட்ட டயர்கள், கொட்டாங்குச்சி, ஆட்டுக்கல் மற்றும் உரல் ஆகியவற்றில் மழை நீர் தேங்கா வகையில் பார்த்துக் கொள்ளவேண்டும்.
வயலில் வேலைபார்க்கும் ஆண் – பெண் இருபாலரும் மழையினால் ஏற்படும் இடி மின்னலின் போது வேலை செய்வதை விட்டு விட்டு பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும். புயல் மற்றும் அதிகப்படியான காற்றின் போது மரங்களின் அடியில் நிற்பது, விளம்பர பதாகைகளின் கீழ் நிற்ப்பது போன்றவற்றை தவிர்த்தல் வேண்டும். மழைக் காலங்களில் ஏரி, குளம் குட்டை ஆகியவற்றில் நீர் நிரம்பி இருக்கும் என்பதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் குளிக்க செல்வதை தவிர்த்தல் வேண்டும்.
நீர் வெளியேறும் தரை பாலங்களை வாகனம் மற்றும் கால்நடையாக கடப்பதை தவிர்க்க வேண்டும். கிராமங்களில் பயன்பாட்டில் உள்ள மற்றும் பயன் பாடற்ற நிலையில் உள்ள குவாரிகளில் தேங்கி உள்ளநீர் நிலைகளில் குளிப்பதை தவிர்த்தல் வேண்டும். கால்நடைகளை மரங்கள் மற்றும் மின்கம்பங்களின் கீழ் கட்டுவதினால் அதிகமாக இடிமின்னல் தாக்கி இறப்பதால், அவற்றின் கீழ் கட்டுவதை தவிர்த்திட வேண்டும். மேலும், கால்நடைகளையும் பாதுகாப்பாக மேய்ச்சலுக்கு அனுப்பிட வேண்டும். மழை காலங்களில் மின்கம்பங்கள் வயல் வெளிகள் மற்றும் இதர இடங்களில் அறுந்து விழுந்திருந்தால் எச்சரிக்கையுடன், மின்சாரத் துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு (9498794987) தொடர்பு கொண்டு தெரியப்படுத்திட வேண்டும் என கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.








kaalaimalar2@gmail.com |
9003770497