Perambalur Collector’s office door was shut down because the woman had to give her a petition on the occupation.

பெரம்பலூர் அருகே நன்னை நல்லம்மாள் என்பவர் ஆக்கிரமிப்பு அகற்ற கோரி தொடர்ந்து மனு கொடுக்க வந்ததால் கலெக்டர் நுழைவு வாயில் அடைக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள நன்னை கிராமத்தை சேர்ந்தவர் நல்லம்மாள் (வயது சுமார் 65), இன்று வழக்கம் போல் நடக்கும் ஆட்சியர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு ஆக்கிரமிப்பு அகற்ற கோரியும், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தக் கோரியும், இன்று மனுவை தயார் செய்து கொண்டிருந்தார்.

இதை அங்கு காவலுக்கு இருந்த காவலர்கள் ஆட்சியரிடம், தெரிவித்தனர், அவரின் உத்தரவின் பேரில், நல்லம்மாள் தயார் செய்த மனுவை எடுத்துக் கொண்டு ஆட்சியர் அலுலக கட்டிடத்தின் முக்கிய நுழைவு வாயிலில் செல்ல முயன்ற போது அங்கிருந்த ஆட்சியரக பணியாளர்கள், மற்றும், காவலர்கள் நீதிமன்றக் கதவை இழுத்து மூடினர்.
பின்னர், அவரை அங்கிருந்த வெளியே கூறினர். இதனால், இச்சம்பவத்தை அங்கிருந்த செய்தியாளர்கள் பதிவு செய்து கொண்டிருந்தனர். பின்னர், பெரம்பலூர் வட்டாசியர் பாலசுப்பிரமணியன், அங்கு வந்து நல்லம்மாளை ஆட்சியர் அலுவலக குறைத் தீர் கூட்டத்திற்கு அழைத்து சென்று கோரிக்கை கேட்டறிந்தார். அப்போது நல்லம்மாள், தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், வழக்கை திரும்ப பெறவும், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும், ரூ. 5 லட்சம் வரை பணம் தருவதாக கூறினார். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தன் பேரில் மனுவை அதிகாரிகளிடம் கொடுத்து விட்டு கலைந்து சென்றார்.

கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக தனிப்பட்ட பெண் ஒருவர் ஆக்கிமிப்பு கோரி தொடர்ந்து கடுமையாக போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!