Perambalur: Cumplimiento de una solicitud de hace 22 años: el Ministro Sivashankar inauguró 3 autobuses, incluido un nuevo autobús para Chinna Venmani.
தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சின்னவெண்மணி கிராமத்திற்கு புதிய பேருந்துடன் வழித்தடத்தை நீட்டிப்பு செய்தும், செட்டிக்குளம் மற்றும் லப்பைகுடிகாடு பகுதிகளுக்கு புதிய 2 நகர பேருந்துகளையும், அரியலூரில் இருந்து நாகல்குழி கிராமத்திற்கு புதிய பேருந்து சேவையையும் கலெக்டர் கிரேஸ் தலைமையில் தொடங்கி வைத்து திமுக கட்சியனர் மற்றும் பொதுமக்களுடன் பேருந்தில் பயணம் செய்தார். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
சின்னவெண்மணி கிராம மக்களின், குறிப்பாக பெண்களின் 22 ஆண்டுகால கோரிக்கை இன்று நிறைவேறியுள்ளது. எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கும், அவசர மருத்துவ சேவைக்கும் அழைத்துசெல்ல முறையான பேருந்து வசதி இல்லாமல் இருந்தோம். இனிமேல் அந்த கவலை இல்லாமல் இருப்போம். அதிலும் பெண்களுக்கு இலவசப் பேருந்து வழங்கியதில் சின்னவெண்மணி,பெரியவெண்மணி கிராமத்து பெண்கள் சார்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், உங்களுக்கும் மனமார்ந்த நன்றி, என தெரவித்தனர்.
கும்பகோணம் மண்டல போக்குவரத்துத்துறை மேலாண்மை இயக்குநர் இரா.பொன்முடி, திருச்சி மண்டல போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் முத்துகிருஷ்ணன், கோட்ட மேலாளர் புகழேந்தி ராஜ், பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் நகராட்சித் தலைவர் அம்பிகா இராஜேந்திரன், திமுக பொதுக்குழு உறு;பினர்கள் அழகு.நீலமேகம், பட்டுச்செல்வி ராஜேந்திரன், திமுக மாவட்ட துணைச் செயலாளர் சி.பாஸ்கர், கொளத்தூர் டி.ஆர். சிவசங்கர், மற்றும் உடையார் டீ ஸ்டால் முத்துக்குமார். முன்னாள் நகராட்சி உறுப்பபினர் அப்துல்பாரூக், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவழகன், வட்டாட்சியர்கள் சரவணன் (பெரம்பலூர்), கோவிந்தம்மாள் (குன்னம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.