Perambalur for Sri Lanka Refugee camp for health disruption for more than 10 dengue: municipal negligence.

பெரம்பலூர் மாவட்டத்தில் டெங்கு நோயை தடுக்கும் பொருட்டு வட்டாரத்திற்கு 20 களப்பணியாளர்களும், பேரூராட்சிக்கு தலா 10 களப்பணியாளர்களும், நகராட்சியில் 20 களப்பணியாளா;கள் என மொத்தம் 140 பேர் நியமிக்கப்பட்டு வீடுவீடாக சென்று டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து எந்தவித தொய்வுமின்றி சீரமைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாவட்டம் முழுவதும் நாளுக்கு நாள் டெங்கு நோய் பீதியால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மாவட்ட தலைநகரான பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் ஒட்டியே நகராட்சி அலுவலகம் உள்ளது. நகராசட்சி எதிரிலேயே இலங்கை அகதிகள் வசிக்கும் சிலோன் காலணி உள்ளது. அதில் 84 வீடுகள் உள்ளதன. அங்கு வசித்து வரும் நவீன் (வயது15), கோபி மகன் ஹர்சா(5), கெவின் ( 4), சுஜிதா(15), திலீபன்,(13) கவுரிதரன் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு டெங்கு நோய் தாக்கியதால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், அப்பகுதியில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாகவும் சாக்கடை கழிவுநீர் வெளியேற வழியில்லாமலும் காட்சியளிக்கிறது. குடிசை வீடு மற்றும் ஓட்டுவீடுமாக உள்ள அப்பகுதியில் உள்ளவர்கள் இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது என்று மாவட்ட நிர்வாகமும் நகராட்சி நிர்வாகமும் தெரிவித்து வரும் வேளையில் நகராட்சி அலுவலகம் அருகிலேயே இப்படியொரு சுகாதார சீர்கேடான பகுதி உள்ளதால் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி குடியிருப்புவாசிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!