Perambalur: Free kidney and general medical camp in Koneripalayam on behalf of Sri Muthiah Hospital!
ஸ்ரீ முத்தையா மருத்துவமனையும், பெரம்பலூர் – சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மருத்துவக்கல்லூரியும் இணைந்து சிறுநீரகம் மற்றும் பொது மருத்துவத்திற்கான இலவச சிறப்பு மருத்துவ முகாமை கோனேரிபாளையத்தில் நடத்தியது.
கோனோரிபாளையம் கோவில் மண்டபத்தில் நடந்த முகாமினை ஸ்ரீஅம்மன் பேங்கர்ஸ் குழும தலைவர் முத்தையா தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். இதில், டாக்டர் ராம்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு இலவசமாக சிகிச்சை அளித்து மருத்துவ சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். இலவசமாக வயிறு மற்றும் குடல் சம்மந்தமான ஸ்கேன் செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்காக 6 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். முகாமில் 200க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.