Perambalur: Govt award for services to disabled persons: Collector Information!
தமிழ்நாடு முதலமைச்சர் 03.12.2024 அன்று நடைபெறும் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிபவர் தமிழக அரசு விருதுகளை வழங்க உள்ளார். இவ்விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என பெரம்பலூர் கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கை, கால் பாதிக்கப்பட்டோர் அல்லது தொழுநோயிலிருந்து குணமடைந்தோர், பார்வை திறன் பாதிக்கப்பட்டோர், செவித்திறன் பாதிக்கப்பட்டோர், அறிவுசார் குறைபாடுடையோர், பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு, புறவுலக சிந்தனையற்றோர், குறிப்பிட்ட கற்றலில் குறைபாடு, மனநோய், ரத்தம் உறையாமை, இரத்த அழிவு சோகை, அரிவாளனு இரத்த சோகை, நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு, நடுக்குவாதம், பல்வகை குறைபாடு உடைய சுயதொழில் புரிவோர் சிறந்த பணியாளருக்கான விருதிற்கு விண்ணப்பிக்கலாம். சிறந்த பணியாளர் விருதின் கீழ் 10 விருதுகள் வழங்கப்படும்.
பார்வை திறன் மற்றும் செவித்திறன் குறையுடையோர்க்கு, கற்பிக்கும் சிறப்பாசிரியர் மற்றும் ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிலும் செவித்திறன் குறைபாடுடையோர்க்கு பயிற்சியளிக்கும் சிறந்த ஆசிரியர் ஆகியோர் ஹெலன் கெல்லர் விருதிற்கு விண்ணப்பிக்கலாம். அறிவுசார் குறைபாடுடையோர்க்கு கற்பிப்பவர்கள் சிறந்த ஆசிரியர் விருதிற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் விருதாளர்கள் http://awards.tn.gov.in என்ற வலைதளத்தில் குறிப்பிடபட்டுள்ள படிவத்தில் விபரங்களை பதிவு செய்தும் கோரப்பட்ட விவரங்களை இணைத்தும் 28.10.2024 க்குள் விண்ணப்பிக்கலாம். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளபடமாட்டாது என அதில் தெரிவித்துள்ளார்.