Perambalur lawyers protested against the police and boycotted the court
பெரம்பலூர் அட்வகேட் அசோசியசன் சார்பில் நேற்று நடந்த அவசரக் கூட்டத்தின் முடிவின் படி குன்னம் காவல் நிலையத்தினரை கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் நீதி மன்றத்தில் வழக்கறிஞராக இருக்கும் ப.அருள் என்பவர் குன்னம் காவல் நிலையத்திற்கு வழக்காடிகளுக்காக குன்னம் காவல் நிலையம் ஆஜராக சென்றதாகவும், அப்போது டி.எஸ்.பி பிரகாஷ், எஸ்.ஐ. கண்ணன் ஆகியோர் வழக்கறிஞர் அருளை பணி செய்யாமல் தடுத்ததாகவும், காவல் நிலையத்தில் ஆஜராக கூடாது என தெரிவித்தோடு பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், தனி மனித உரிமையை மீறி காவல் துறையினர் படம் பிடித்ததை கண்டித்து அட்வகேட் அசோசியன் சங்கத்தினர் இயற்றிய தீர்மானத்தின்படி இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.