Perambalur: Liquor is being sold 24 hours round the clock without stopping near Veppanthatta! Women request to stop!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நூத்தப்பூர் ஊராட்சி உள்ளது. பெரம்பலூர் – சேலம் மாவட்ட எல்லைப்பகுதியாக உள்ளது. அந்த ஊராட்சியில், நூத்தப்பூர், நெற்குணம் இரு கிராமங்களிலும், 24 மணி நேரமும் கள்ளத்தனமாக பெரம்பலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் உள்ள மதுக் கடைகளில் வாங்கி வரப்பட்ட மதுப்புட்டிகள் விற்பனை செய்ப்பபட்டு வருகிறது. இதனால் குடிமகன்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், அவர்களது குடும்பத்தினர்கள் சோக நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குடிக்கு அடிமையானவர்களின் கொண்டாட்டம் என்பது குடிமகன்களின் குடும்பங்கள், வாரிசுகள், அடுத்த தலைமுறை தள்ளாட்டம் என்பது தெரியமலேயே கூலி வேலைக்கு சென்று சம்பாதித்த பணத்தை காலை முதல் மாலை வரை கொஞ்சமாக குடிப்பதால் குடும்பங்கள் மேலும் வறுமையில் வாடும் நிலைக்கு தள்ளப்படுகிறது. மேலும், அப்பகுதியில் பெரும்பாலான குடும்ப தலைவர்கள் குடிக்கு அடிமையாகி விட்டதால், குடும்ப தலைவிகள் சம்பாதித்திலேயே குடும்பங்கள் வாழ்வாதரத்தை நடத்தி வருவதாக அப்பகுதி பெண்கள் தெரிவிக்கின்றனர்.
கள்ளத்தனமாக மது விற்பவர்கள் நாள் ஒன்றுக்கு 10 ஆயித்திற்கு மேல் சம்பாதிப்பதாகவும், அதிகாரிகளுக்கு உரிய கப்பம் கட்டி விடுவதால், கண்டு கொள்ளாமல் நீண்ட நாட்களாக நடப்பதாக அப்பகுதி பெண்கள் தெரிவிக்கின்றனர். எனவே, அந்த கிராமத்தில், அரசு மதுக்கடை திறக்கும் நேரத்தை தவிர பிற நேரங்களில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி அங்கிருந்து சுமார் 35 கி.மீ என்பது குறிப்பிடத்தக்கது.