Perambalur: Man arrested for arguing over space issue with neighbor’s house!
பெரம்பலூர் அருகே உள்ள செங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் ராமராஜ் மகன் அஜித் (28), இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த கந்தசாமி குடும்பத்தினருக்கும் இடம் தொடர்பான பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சர்வேயரை வைத்து அளந்து, இரு வீட்டாரும் எல்லை கண்ட நிலையில், அஜித் வீடு கட்டும் பணியை தொடர்ந்து வந்துள்ளார். இதனிடையே கந்தசாமி குடும்பத்தினர் இடப்பிரச்சனை தொடர்பாக வாக்குவாத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், வீட்டின் அருகே சந்தில் பள்ளம் தோண்டி தண்ணீர் விட்டு கட்டுமானத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக மருவத்தூர் போலீசில் அஜித் கொடுத்த புகாரின் பேரில் கந்தசாமி, அவரது மனைவி சரோஜா, மகன்கள் செல்வம், சின்னதுரை மீது, வழக்குப் பதிவு செய்தனர். விசாரணை நடத்திய போலீசார் சின்னதுரை (35) கைது செய்து சிறைக்காவலுக்கு அனுப்பி வைத்தனர்.