Perambalur: MLA Prabhakaran helps those injured in road accidents!

பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ் செல்லும் சாலையில் இன்று காலை சுமார் 9 மணி அளவில், 2 பைக் ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி சாலையில் ரத்த காயங்களுடன் விழுந்து கிடந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் எம்.எல்.ஏ ம.பிரபாகரன் விபத்துக்குள்ளானவர்களை , அங்கிருந்தவர்களின் உதவியுடன் மீட்டு, அவசர ஊர்தியில் ஏற்றி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். ஆம்புலன்சில் வருபவர்களுக்கு சிகிச்சைக்கு உதவுமாறு இணை இயக்குநர் பொது சுகாதார துறை அலுவலருக்கு தகவல் தெரிவித்தார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!